www.garudabazaar.com

VARISU: விஜய்க்காக பாடிய சிலம்பரசன்.. போட்டோக்களுடன் வெளியான 'தீ' அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது ‌

Silambarasan TR Sung Varisu Thee Thalapathy Song for Vijay

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Silambarasan TR Sung Varisu Thee Thalapathy Song for Vijay

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

Silambarasan TR Sung Varisu Thee Thalapathy Song for Vijay

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தீ தளபதி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்பு இயக்குனர் வம்சி & இசையமைப்பாளர் தமன் உடன் இருக்கும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி என்பது விஜய் சினிமாவில் அறிமுகமான நாளாகும். நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இந்த பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Sung Varisu Thee Thalapathy Song for Vijay

People looking for online information on Silambarasan TR, Varisu, Vijay will find this news story useful.