www.garudabazaar.com

செல்வராகவனின் பகாசூரன் டிரெய்லர் .. “பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும்...”.. இயக்குநர் பதிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன்.

Mohan G directorial bakasuran starring Selvaraghavan Trailer

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

Mohan G directorial bakasuran starring Selvaraghavan Trailer

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.  சமீபத்தில்தான் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் டீஸரும் ஏற்கனவே வெளியாகியது.

முன்னதாக இப்படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி பேசும்போது, “பகாசூரன் உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி பேசும்போது,  “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதைக் களமும் அப்படிதான் அமைந்துள்ளது.  கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும்.” என்று கூறி இருந்தார்.

Mohan G directorial bakasuran starring Selvaraghavan Trailer

‘பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் நடிகராக கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் செல்வராகவன், இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை தமது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்த இப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி, “வெளிவராத பல நிகழ்கால உண்மை சம்பவங்களை வெளியே கொண்டு வரும் முயற்சி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G directorial bakasuran starring Selvaraghavan Trailer

People looking for online information on Bakasuran, Bakasuran Trailer, Drowpathy, Mohan g, Selvaraghavan will find this news story useful.