நயன்தாராவுக்கு கொரோனாவா என்று புரளியைக் கிளப்பினவங்களுக்கு விக்னேஷ் சிவன் பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்க, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

Vignesh Sivan replies to all who spread rumours about Nayanthara

திரைப் பிரபலங்களைப் பொருத்தவரையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். சோஷியல் மீடியா மூலம் மக்களிடம் உரையாடியும், ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் மூலம் ஆக்டிவ்வாக இயங்கியும் வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவுக்கு கொரோனாவா என்று தலைப்பிட்டு மீடியாக்கள் சில பரபரப்புக்காக செய்தி போட்டு, வதந்தியை பரப்பியது. இது குறித்து விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சோஷியல் மீடியாவிலும் இந்த வதந்தியை வேகமாக பரப்பினர்.

இதற்கு அதிரடியான பதிலை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் ஃபேஸ் ஆப் மூலம் நயனும் அவரும் சிறுவன் சிறுமியாக காட்சியளிக்கின்றனர். சிறிய வயதுள்ள க்யூட்டான நயன்தாராவும் சிறுவன் விக்னேஷும் ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு ஜாலியான முகபாவங்களைக் கொடுத்துள்ளணர். அவர்களது இந்த க்யூட்டான கூல் ரியாக்‌ஷன்தான் புரளியைப் பரப்பியவர்களுக்கு பதிலடி என்று விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டது, ‘எங்களைப் பத்தின  செய்திகளை நாங்க இப்படித்தான் பாக்கறோம், எங்களுக்கு கொரோனா வந்திருக்குன்னு கற்பனை பண்ணின ப்ரெஸ், சோஷியல் மீடியா அன்பர்களே... நலம் விரும்பிகளே- நாங்க சந்தோஷமா இருக்கோம், ஆரோக்கியமா இருக்கோம். கடவுள் எங்களுக்கு போதுமான மனவலிமை தந்திருக்கார், எந்த அளவுக்குன்னா கோமாளிங்களான நீங்க பண்ண அத்தனை காமெடியையும் பாத்து சிரிக்கற அளவுக்கு வலிமையாவே இருக்கோம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று காட்டமாகவும் அதே சமயம் நக்கலாகவும் பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்

 

இந்த நயன்தாரா விக்னேஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த க்யூட்டான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Sivan replies to all who spread rumours about Nayanthara

People looking for online information on Covid 19, Lockdown, Nayanthara, Vignesh Sivan will find this news story useful.