தளபதி விஜய் பிறந்தநாள்... புதிய போஸ்ட்டரை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு,  அர்ஜுன் தாஸ் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய படம் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

புதிய போஸ்ட்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் Lokesh kanagaraj release new poster for thalapathy vijay birthday

இந்நிலையில் மாஸ்டர் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு அல்லது ட்ரெய்லர் இந்த பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் பிறந்தநாளையடுத்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். "எதிர்க்க எதிர்க்க எழுவேன் ரசிகர்களுடன்" என்ற பஞ்ச் லைனுடன் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான தளபதி ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ரீட்வீட் செய்து வருகின்றனர்.

புதிய போஸ்ட்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் Lokesh kanagaraj release new poster for thalapathy vijay birthday

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.