www.garudabazaar.com

"அந்த லிரிக்ஸ் தான் இன்ஸ்பிரேஷன்!"... தனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பன்முக நடிகர் தனுஷ் தனக்கென ஒரு முக்கிய இடத்தை செதுக்கிக்கொண்ட ஒருவர் என்றே சொல்லலாம்.

That lyric inspiration moment dhanush shares viral pic instagram

குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன், வடசென்னை படங்களாகட்டும், பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்த மாரி, மாரி 2 படங்களாகட்டும் ஒவ்வொரு கதைக்கும், களத்துக்கும் கமர்ஷியலுக்கும் எதார்த்த சினிமாவுக்கும் என தன்னை தகவமைத்துக் கொள்வதில் தேர்ந்திருக்கிறார் தனுஷ்.

அசுரன் படத்தில் நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களை பெற்றார். தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடிக்கும் தனுஷ், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாரி-2 படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து தனுஷ் நடித்த ரவுடி பேபி பாடலுக்கான உற்சாகத்துடன் தனுஷ் சமீபத்திய புகைப்படம் ஒன்றை தமது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் தனுஷ் முன்பாக ஒரு கோலி சோடா இருக்கிறது. அதை குறிப்பிட்டு, “ஏய்.. என் கோலி சோடாவே - அந்த லிரிக்ஸ் தான் இன்ஸ்பிரேஷன்!” என பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

தனுஷ் தற்போது தனது ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தி ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டில் மார்க் கிரீனி எழுதிய அதே பெயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த படம் என தெரிகிறது. 

ALSO READ:வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் பட சிங்கிள்! பாடியது யார்னு தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

That lyric inspiration moment dhanush shares viral pic instagram

People looking for online information on Dhanush, Hey en goli soda ve, Maari, Maari 2, ROWDYBABY will find this news story useful.