Reliable Software
www.garudabazaar.com

"தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருந்தா..".. 'ஜகமே தந்திரம்' ட்ரெய்லர் வெளியான கையோடு தனுஷ் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் பட வெளியீடு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

dhanush viral tweet over Jagame thanthiram netflix release tweet

தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ்  மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நேராக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது.

இந்நிலையில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்வீட் பதிவிட்டுள்ள தனுஷ், “நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் என்ன ஒரு பெரிய அனுபவமாக இருந்திருக்கும். இருந்தாலும் அனைவரும்  ஜகமே தந்திரம் & சுருளியை என்ஜாய் பண்ணுவீர்கள் என நம்புகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து தனுஷ், மாரி செல்வராஜ் மீண்டும் இணையும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் இந்த படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே கர்ணன் திரைப்படம் கடந்த மே 14-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

ALSO READ: "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!"... வெளியான ஜகமே தந்திரம் ட்ரெய்லர்!!

dhanush viral tweet over Jagame thanthiram netflix release tweet

People looking for online information on Dhanush, Karthik Subbaraj, Netflix, Reliance Entertainment, Santhosh Narayanan, Y Not Studios will find this news story useful.