Reliable Software
www.garudabazaar.com

Video: "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!"... வெளியான ஜகமே தந்திரம் ட்ரெய்லர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Dhanush Jagame Thandhiram Trailer out netflix trending

இதையடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் தனுஷ். எனவே தனுஷ், மாரி செல்வராஜ் மீண்டும் கூட்டணி சேரும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் இந்த படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே கர்ணன் திரைப்படம் கடந்த மே 14-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா சூழலால் திரையரங்குகள் செயல்படாத நிலையில், ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி வெயிட் ஈஸ் ஓவர் என்பது போல தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் தற்போது பட்டாசாக வெளியாகியுள்ளது. 

இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் இருக்கின்றனர்.  Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்து இந்த படம் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில்  ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் 18+வயதுக்காரர்களுக்கான திரைப்படம் என்றும் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்றும் ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் இப்படத்தின் மலையாள வெர்ஷன் ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகியுள்ளது. 

ஜகமே தந்திரம் திரைப்படம் மலையாள மொழியிலும் அதே ஜூன் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: “நிஜ வாழ்க்கையில சூர்யா நிறைய கோபப்படுவார்.. ஆனா அந்த கோபத்தை..” .. ரிவீல் செய்த சூரரைப் போற்று இயக்குநர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Jagame Thandhiram Trailer out netflix trending

People looking for online information on Dhanush, Karthik Subbaraj, Netflix, Reliance Entertainment, Y Not Studios will find this news story useful.