Maha
www.garudabazaar.com

ஜெயிச்சிட்ட மாறா! சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற சூர்யா.. ! ரசிகர்கள் வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Suriya won Best Actor National Film Award for Soorarai Potru

Also Read | KGF Chapter 2 படத்தின் 100 வது நாள்.. உருக்கமான கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு! வைரல் வீடியோ

கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.

78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சாதனை படைத்தது.

Suriya won Best Actor National Film Award for Soorarai Potru

இந்நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்குசிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.

சூரரைப் போற்று  படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Suriya won Best Actor National Film Award for Soorarai Potru

Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya won Best Actor National Film Award for Soorarai Potru

People looking for online information on National Film Award, Soorarai Potru, Suriya, Suriya won Best Actor National Film Award will find this news story useful.