o2

"Rocketry: The Nambi Effect" பணம் வாங்காமல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா-ஷாருக்கான்.. மனம் திறந்த மாதவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் R மாதவன், முதல் முறையாக இயக்குநராக பணியாற்றியுள்ள “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

Actor Madhavan about Sharukh Khan Suriya Cameo Role in Rocketry

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய பட பூஜை.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க! வைரல் PHOTOS

“ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் 1 ஆம் தேதி ஜூலை 2022 உலகம் முழுதும் வெளியாகிறது.  இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளில் படமாக்கப்பட்டது, மேலும் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. நடிகர் R மாதவன் இப்படத்தில் அறிவியலாளர் நம்பி நாரரயணனாக நடித்திருப்பதுடன், இப்படத்தை தயாரித்து , எழுதி, இயக்கியும் உள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களான ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே ஆகியோருடன் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளனர்.

Actor Madhavan about Sharukh Khan Suriya Cameo Role in Rocketry

இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா நடித்துள்ளது பற்றி மாதவன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்த கேமியோ ரோலில் நடிக்க இருவரும் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும், சூர்யா விமான பயணச் செலவு, ஹோட்டல் செலவு ஆகியவற்றை அவரே செய்து மும்பையில் படப்பிடிப்பை முடித்து கொடுத்ததாகவும் கூறி மாதவன் நெகிழ்ந்துள்ளார்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளர், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன்,  உளவுத்துறையால் தேசத்துரோகம் செய்ததாக கைதுசெய்யப்பட்ட  பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Actor Madhavan about Sharukh Khan Suriya Cameo Role in Rocketry

பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Also Read | 'ஜெய்பீம்' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அடுத்த படம்.. வெளியான EXCLUSIVE அப்டேட்!

"ROCKETRY: THE NAMBI EFFECT" பணம் வாங்காமல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா-ஷாருக்கான்.. மனம் திறந்த மாதவன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Madhavan about Sharukh Khan Suriya Cameo Role in Rocketry

People looking for online information on Madhavan, Rocketry movie, Sharukh Khan, Sharukh Khan Suriya Cameo Role, Suriya will find this news story useful.