www.garudabazaar.com

சூர்யா - பாலா இணையும் 'வணங்கான்'.. ஜி.வி.பிரகாஷ்குமார் கொடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Suriya Bala Vanangaan Movie Latest Update from GV Prakash

Also Read | VTK: சென்சாரான 'வெந்து தணிந்தது காடு'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் & RUNNING TIME விவரம்!

கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார்.

அடுத்து பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Suriya Bala Vanangaan Movie Latest Update from GV Prakash

'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும்.

இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டுள்ளது.

Suriya Bala Vanangaan Movie Latest Update from GV Prakash

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

Suriya Bala Vanangaan Movie Latest Update from GV Prakash

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் பதிவுகள் துவங்கி உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Also Read | நீடூழி வாழ்க மாமன்னனே.. வடிவேலுவுக்கு வெச்ச வேறலெவல் ட்ரீட் .. அசத்திய உதய் - மாரி

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Bala Vanangaan Movie Latest Update from GV Prakash

People looking for online information on Bala, Bala Vanangaan Movie Latest Update, GV Prakash, Suriya, Vanangaan will find this news story useful.