www.garudabazaar.com

Suriya42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. வெளியான கொல மாஸ் மோஷன் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா & சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Suriya Siruthai Siva Suriya 42 Movie Motion Poster

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும்   "சூர்யா 42" படத்தின் படப்பிடிப்பு lavish hotel செட் அமைக்கப்பட்டு கடந்த (ஆகஸ்ட் 24, 2022) தேதி முதல் படப்பிடிப்பு துவங்கியது. 

‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், Studio Green நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை  K.E.  ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்  உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கின்றனர். 

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி நாராயணா திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (09.09.2022) காலை 10 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த மோஷன் போஸ்டரில் வானத்தில் கழுகு பறந்து வருவதைப் போலவும் பூமியில் இடிபாடுகளில் இருள் சூழ்ந்த நிலையில் இருப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. பறந்து வந்த கழுகு சூர்யாவின் தோளில் அமர்வது போல மோஷன் போஸ்டர் நிறைவடைகிறது.

SURIYA42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. வெளியான கொல மாஸ் மோஷன் போஸ்டர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Siruthai Siva Suriya 42 Movie Motion Poster

People looking for online information on Siva, Suriya, Suriya 42 will find this news story useful.