www.garudabazaar.com

OFFICIAL: 10 மொழிகளில் வெளியாகும் சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. 3D வேற இருக்கா? மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின்

Siruthai Siva Suriya 42 Movie 3D Motion Poster Latest Update

தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read | டிவி நிகழ்ச்சியில் Dance ஆடும்போது சோகத்தின் உச்சம் - சுஜா & சிவா சொன்ன ஷாக்கிங் தகவல் Exclusive

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

Siruthai Siva Suriya 42 Movie 3D Motion Poster Latest Update

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த (21.08.2022) அன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடந்தது.

மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

Siruthai Siva Suriya 42 Movie 3D Motion Poster Latest Update

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என்று சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Siruthai Siva Suriya 42 Movie 3D Motion Poster Latest Update

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | Suriya42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. வெளியான கொல மாஸ் மோஷன் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Siruthai Siva Suriya 42 Movie 3D Motion Poster Latest Update

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42 Movie, Suriya 42 Movie 3D Motion Poster will find this news story useful.