www.garudabazaar.com

"அஜித் & அவரின் BMW" .. தீயாய் பரவும் மேனேஜர் சுரேஷ் சந்திரா பகிர்ந்த ஸ்டைலிஷ் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் இமயமலை பைக் சுற்றுப்பயண புகைப்படங்களை மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Suresh Chandraa Shared Ajith kumar AK Himalayas Bike Ride Photos

Also Read | BREAKING: வெளிநாட்டில் AK61 படத்தின் ஷூட்டிங்? ஆஹா! அதுவும் இந்த நாட்லயா? தெறி அப்டேட்

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Suresh Chandraa Shared Ajith kumar AK Himalayas Bike Ride Photos

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Suresh Chandraa Shared Ajith kumar AK Himalayas Bike Ride Photos

பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Suresh Chandraa Shared Ajith kumar AK Himalayas Bike Ride Photos

இந்நிலையில் இந்த பைக் சுற்றுப்பயணத்தில்  எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "மனிதனும் அவரின் இயந்திரமும்" என தலைப்பிட்டு டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கருப்பு வெள்ளை நிறத்தில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. உணவக்த்திலும் சாலையிலும் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

 

Also Read | VIDEO: BIGGBOSS சீசன் 6 ல ரக்சன் & ஜாக்குலினா? இதுவும் நல்லா தான் இருக்கும்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chandraa Shared Ajith kumar AK Himalayas Bike Ride Photos

People looking for online information on Ajith Kumar, AK Himalayas Bike Ride Photos will find this news story useful.