www.garudabazaar.com

10 மில்லியன்களை கடந்த Chilla Chilla.. திருமூர்த்தி குரல்லயும் சும்மா பட்டையை கெளப்புதே.. தெறி வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடலை பிரபல பாடகர் திருமூர்த்தி பாடி வெளியிட்டுள்ள வீடியோ, தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Singer Thirumoorthi sing Ajith kumar thunivu chilla chilla song

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் 'துணிவு' படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் அஜித் குமார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, அமீர், பாவனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Singer Thirumoorthi sing Ajith kumar thunivu chilla chilla song

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதனிடையே, துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'Chilla Chilla' நேற்று (09.12.2022) வெளியாகி இருந்தது.

இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இந்த பாடலில் வரும் இசை மற்றும் வரிகள், ரசிகர்கள் பலரையும் Vibe மோடுக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், தொடர்ந்து பாடலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது மட்டுமில்லாமல், 24 மணி நேரத்திற்குள் Chilla Chilla பாடல், யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் 1 மில்லியன் லைக்குகளையும் 'Chilla Chilla' பாடலின் லிரிக் வீடியோ பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல பாடகர் திருமூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Chilla Chilla பாடலை பாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். கையில் குடத்தை வைத்து கொண்டு தாளம் போட்டுக் கொண்டு மிகவும் அசத்தலாக திருமூர்த்தி பாடும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில்; அதிகம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், வீடியோவும் அதிகம் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி' பாடலையும் திருமூர்த்தி பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Singer Thirumoorthi sing Ajith kumar thunivu chilla chilla song

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla, Thirumoorthi, Thunivu will find this news story useful.