www.garudabazaar.com

Chilla Chilla: துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. செம்ம சூப்பர் COOL லுக்கில் அஜித்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Thunivu Chilla Chilla Song New Super Cool Poster

Also Read | துணிவு படத்துல 'சில்லா சில்லா' ஓபனிங் பாடலா? பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE!

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Thunivu Chilla Chilla Song New Super Cool Poster

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது.

Thunivu Chilla Chilla Song New Super Cool Poster

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி மாலை 6:30 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இதனை பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.  சிவப்பு - கருப்பு நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் சூப்பர் கூலாக அஜித் நடனம் ஆடும் ஸ்டில்லுடன் போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் நடன கலைஞர்கள் பலர் வெறித்தனமாக நடனம் ஆடும் ஸ்டில்லும் போஸ்டரில் மெர்ஜ் ஆகி உள்ளது. சில்லா சில்லா என்ற வாசகம் வெண்மை நிறத்தில் நீல நிறத்தின் பிண்ணனியில் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

Thunivu Chilla Chilla Song New Super Cool Poster

இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். துணிவு படத்தின் 4-வது போஸ்டராக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | "மேலே போயிட்டே இருப்பீங்க.. கவலைப்படாதீங்க".. வைசாக்கிடம் நடிகர் அஜித் சொன்ன வாழ்த்து!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Chilla Chilla Song New Super Cool Poster

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu, Thunivu Chilla Chilla poster, Thunivu Chilla Chilla Song will find this news story useful.