Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'பிரபல சீரியலில் இருந்து விலகிய நாயகி!'.. 'போகாதீங்க ப்ளீஸ்.. திரும்பி வாங்க' - ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சன்.டிவி சீரியலான பூவே உனக்காக சீரியலில் இருந்து அந்த சீரியலின் 2 நாயகிகளுள் ஒருவரான ஜோவிதா லிவிங்ஸ்டன் அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

Poove Unakaga Keerthi quits Serial Sun tv பூவே உனக்காக

சன்.டி.வியில் இரவு 8 மணிக்கு வாரநாட்களில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடருக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு. இந்த தொடரில் பூவரசி மற்றும் கீர்த்தி எனும் கதாபாத்திரங்களும் கதிர் என்கிற கதாபாத்திரமும் பிரபலம். இதில் கதிருக்கும் பூவரசிக்கும் கதைப்படி ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையிலும் கதிர் கீர்த்தியையே நினைத்துக்கொண்டிருந்தார். அத்துடன் பூவரசியும் கதிரின் காதலை சேர்த்து வைக்க உதவிக்கொண்டிருந்தார்.

Poove Unakaga Keerthi quits Serial Sun tv பூவே உனக்காக

ஆனால் அண்மையில் தான் கீர்த்தி எனும் கதாபாத்திரம் செல்வம் எனும் கதாபாத்திரத்துடன் திருமணம் செய்துகொண்டது. இதனால் மீண்டும் கதிர் தனது மனைவியான பூவரசியை ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jovita Livingston Jones🦋 (@jovitalivingstonoffl)

இந்நிலையில் கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் மேற்படிப்புக்காக செல்வதால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும், விரைவில் வேறு ஒரு புரோஜக்டில் சந்திப்பதாகவும் கூறியதுடன் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் வாய்ப்பளித்த சன்.டிவிக்கும் நன்றி தெரிவித்து தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் 'திரும்பி வாங்க அக்கா..' என்று உருகி வருகின்றனர். ஜோவிதா லிவிங்ஸ்டன் பிரபல 90ஸ் ஹீரோ, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் என பன்முகம் கொண்ட லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'பிரபல விளையாட்டு வீராங்கனை BioPic-ல்?'.. ஐஸ்வர்யா ராஜேஷா? உண்மை என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Poove Unakaga Keerthi quits Serial Sun tv பூவே உனக்காக

People looking for online information on Jovita, Kathir Keerthi, Keerthi, Poove Unakaga, Serial, Sun TV will find this news story useful.