Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"நம்ம Character-அ Define பண்ணாது"....Haters-க்கு ஷிவாங்கி கொடுத்த சரியான பதிலடி... செம வைரல் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஷிவாங்கி அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Sivaangi bold reply to controversy Haters-க்கு ஷிவாங்கி கொடுத்த பதிலடி

இந்நிலையில் இந்த சீசனில் முதல் நபராக மதுரை முத்து எலிமினேட் செய்யப்பட்டார். எனினும் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காரணமாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு கெஸ்ட்டாக கலந்துகொள்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியின் போது அஸ்வின், ஷிவாங்கி, மதுரை முத்து, புகழ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை முத்து ஒரு காமெடி சொல்ல. அதற்கு எதிர் கவுன்ட்டராக ஷிவாங்கி சொன்ன வாரத்தை சற்று விவாதம் ஆகிவிட்டது. உடனே சிலர் "இப்படியா வயதிற்கு  மரியாதை இல்லாமல் பேசுவது' என்று பதிவிட ஆரம்பித்து விட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு ஷிவாங்கி தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும் பொழுது "சில சமயம் நம்முடைய செயல்கள், நமது உண்மையான குணத்தை வெளிப்படுத்துவது இல்லை. அதையும் மீறி சிலர் உங்களைப் டார்கெட் செய்தால் உங்களை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை" என்பதுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார்.

Tags : Shivangi

தொடர்புடைய செய்திகள்

Sivaangi bold reply to controversy Haters-க்கு ஷிவாங்கி கொடுத்த பதிலடி

People looking for online information on Shivangi will find this news story useful.