Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

அஸ்வினை சுற்றி வளைத்த இளம் பெண்கள்.. என்ன பாடல் பாடியுள்ளனர் பாருங்க.. நெகிழ்ச்சி தருணம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியின் இந்த சீசனை ஷிவாங்கி, அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Ashwin heart warming video with fans அஸ்வினை சுற்றி வளைத்த இளம் பெண்கள்

Behindwoods Gold Icons விருது விழாவிற்கு வந்த அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு மில்லியன் Follower-களை எட்டியுள்ள நிலையில் அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், குக் வித் கோமாளி போட்டியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியே சென்றிருக்கும் அவரை ரசிகர்கள் குழு சூழ்ந்து விட்டது. அதிலும் பல இளம்பெண்கள் அவருக்காக ஷிவாங்கி பாடிய 'கண்ணு வீசி' என்ற பாடலை பாடுகின்றனர். இதை பார்த்த அஷ்வின் அபப்டியே இன்ப அதிர்ச்சியில் போகிறார். அவர் கூறும்போது "இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் அன்பிற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

Tags : Ashwin

தொடர்புடைய இணைப்புகள்

Ashwin heart warming video with fans அஸ்வினை சுற்றி வளைத்த இளம் பெண்கள்

People looking for online information on Ashwin will find this news story useful.