Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"பார்ட்னருக்கு வாழ்த்துக்கள்!".. பிறந்த நாளில் 'செல்வராகவனுக்கு' வாழ்த்து சொன்ன நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் , இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். 

Keerthi Suresh Wishes for Sevaraghavan Birthday செல்வராகவன்

தனுஷின் சகோதரரும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனுமான செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Keerthi Suresh Wishes for Sevaraghavan Birthday செல்வராகவன்

அவரது நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியான இதே நாளில், செல்வராகவனின் பிறந்த நாளான இன்று (மார்ச் 5-ஆம் தேதி) அவருக்கு பலரும் வாழ்த்து சொல்லிவரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Keerthi Suresh Wishes for Sevaraghavan Birthday செல்வராகவன்

அந்த ட்வீட்டில், “எம் க்ரைம் பார்ட்னருக்கு வாழ்த்துக்கள். தங்களை ஒரு அமேசிங் இயக்குநராகவும் இப்போது பிரில்லியண்ட் நடிகராகவும் அறிவதிலும் தங்களுடன் பணிபுரிவதிலும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் முதல் முதலாக நடிக்கும் திரைப்படம் சாணி காயிதம். இப்படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார். 

ALSO READ: நெஞ்சம் மறப்பதில்லை - திரை விமர்சனம்

Keerthi Suresh Wishes for Sevaraghavan Birthday செல்வராகவன்

People looking for online information on Birthday, Keerthi Suresh, Nenjam Marappathillai Tamil, Saani Kaayidham, Selvaraghavan will find this news story useful.