www.garudabazaar.com
iTechUS

இந்தா அடுத்த அப்டேட்.. பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்.. வாங்கிய பிரபல முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Pathu Thala OTT Rights Bagged by Amazon Prime Video

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஃப்ரண்ட போல யாரு மச்சான்..".. ராமுக்கு விக்ரமன் கொடுத்த செம சர்ப்ரைஸ்..

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Pathu Thala OTT Rights Bagged by Amazon Prime Video

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pathu Thala OTT Rights Bagged by Amazon Prime Video

Images are subject to © copyright to their respective owners.

நாளை பிப்‌.3 அன்று மதியம் 12:07 மணிக்கு  பத்து தல படத்தின் 'நம்ம சத்தம்' எனும் முதல் சிங்கிள் பாடல் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்து தல படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ தளம் கைப்பற்றி உள்ளது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ தளம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | நண்பேன்டா.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு.. அசீம் & மணி சந்திப்பு! வைரலாகும் பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala OTT Rights Bagged by Amazon Prime Video

People looking for online information on Amazon Prime Video, Pathu Thala, Pathu Thala OTT Rights, Silambarasan TR will find this news story useful.