www.garudabazaar.com

சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. பிரியா பவானி சங்கர் பகிர்ந்த தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார்.

Priya Bhavani Shankar Completed Dubbing for Pathu Thala

Also Read | வாரிசு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் வைரல் போஸ்டர்ஸ்!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Priya Bhavani Shankar Completed Dubbing for Pathu Thala

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Priya Bhavani Shankar Completed Dubbing for Pathu Thala

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Priya Bhavani Shankar Completed Dubbing for Pathu Thala

நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியிருந்தார். தற்போது நடிகை பிரியா பவானி சங்கர், பத்து தல படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இயக்குனர் கிருஷ்ணாவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்.

Also Read | ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Completed Dubbing for Pathu Thala

People looking for online information on Pathu Thala, Priya Bhavani Shankar will find this news story useful.