‘விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… எதிர்பார்ப்பை எகிறவைத்த லோகேஷ்…. வைரல் Poster

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் சம்மந்தமான புதிய போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Lokesh latest poster with suriya pic fans exciting

விக்ரம்….

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Lokesh latest poster with suriya pic fans exciting

கதாபாத்திரங்கள்…

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதற்கு, கமலுடன் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் படத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. மேலும் சூர்யாவும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் படத்தில் இதுவரை யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பகிராமல படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். படத்தலைப்பான ‘விக்ரம்’ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாரா அல்லது டிரைலரில் இடம்பெறும் குழந்தையின் பெயரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Lokesh latest poster with suriya pic fans exciting

புதிய போஸ்டர்….

இந்நிலையில் படம் நாளை மறுநாள் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரில் சூர்யா இடம்பெற்றிருக்கிறார். மேலும் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன என்று கேள்விக்குறியோடு அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரம் என எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலையில் இந்த போஸ்டர் மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. ஏற்கனவே பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ‘சந்தானம்’ கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lokesh latest poster with suriya pic fans exciting

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh latest poster with suriya pic fans exciting

People looking for online information on Kamal, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.