VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "வணங்கான்‌ பட செட்டில்‌‌".. மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படம் பற்றி நடிகை கீர்த்தி ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.

Krithi Shetty Latest Tweet about Suriya Vanangaan

Also Read | மனைவியோடு KGF ஹீரோ யஷ் சூப்பர் ஃபோட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

பாலாவும் சூர்யாவும் மீண்டும் இணையும் 'வணங்கான்' படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும்.

Krithi Shetty Latest Tweet about Suriya Vanangaan

இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.

Krithi Shetty Latest Tweet about Suriya Vanangaan

கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி டிவிட்டர் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது வணங்கான் படத்தில் சூர்யா உடன் நடித்த அனுபவங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கீர்த்தி ஷெட்டி, "நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதைக்குரிய நபர் சூர்யா, வணங்கான் படத்தின் படப்பிடிப்பு செட்டில் இருந்தது கனவு போல் இருந்தது" என கூறியுள்ளார்.

Krithi Shetty Latest Tweet about Suriya Vanangaan

இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | கேங்ஸ்டர் 'வேதா' லுக் இப்படி தான் உருவாச்சு.. இந்தி விக்ரம் வேதாவின் மிரட்டலான BTS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Krithi Shetty Latest Tweet about Suriya Vanangaan

People looking for online information on Krithi Shetty, Krithi Shetty Latest Tweet, Suriya, Vanangaan Movie will find this news story useful.