லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால்... கவின் நண்பர் ட்வீட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 02, 2019 12:03 PM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் 101 வது நாளில் அடியெடுத்து வைக்கும் இந்நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கும் போட்டியாளர்களான முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வனிதா, சாக்சி, கஸ்தூரி, அபிராமி மற்றும் சேரன் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்த நிலையில் கவினை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரை அடித்த நண்பர் பிரதீப் டுவிட்டரில், லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என டுவிட் போட்டுள்ளார்.
Social experiment:
Would you all make losliya win, if I'm willing to take a slap from her on behalf of kavi?#KudumbathukullayaeKasuIrundhaCommissionKekalamLa #SuyanalamKarudhi #ImAnAgentOfChaosToo #ILikePlayingStrategyGames
— Pradeep Antony (@TheDhaadiBoy) October 1, 2019