Bigg Boss 3 Promo: '100வது நாளில் Bigg Boss' - ஆனந்த கண்ணீருடன் நன்றி கூறும் முகேன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 12:42 PM
பிக்பாஸில் இன்றுடன் 100 வது நாளில் அடியெடுத்து வைக்கிறார்கள் போட்டியாளர்கள். 16 பேருடன் தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது, சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

நேற்றைய தினம் ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா என ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களுடன் உரையாடினார்கள். பின்னர் பிக்பாஸில் 100 நாட்கள் நினைவுகளை புகைப்படங்களாக தொகுத்து பிக்பாஸ் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அந்த புகைப்படங்களை பார்த்து தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர். அந்த வகையில் முகேன் சாண்டி குறித்து பெருமையாக பேசினார். சாண்டியால் தான் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று பேசினார்.
BIGG BOSS 3 PROMO: '100வது நாளில் BIGG BOSS' - ஆனந்த கண்ணீருடன் நன்றி கூறும் முகேன்! வீடியோ
Tags : Bigg Boss 3, Kamal Haasan, Sandy, Mugen