''பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறேன், வனிதா வம்புக்கு இழுத்தா...'' - பிக்பாஸ் பிரபலம் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 09:02 PM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் 100 வது நாளில் அடியெடுத்து வைக்கும் இந்நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கும் போட்டியாளர்களான முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த சீசன் 3 போட்டியாளர்களான ஃபாத்திமா பாபு, மீரா மிதுன், மோகன் வைத்தியா, ரேஷ்மா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சாக்ஷியும், கஸ்தூரியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தங்களது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், ''கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!
— Kasturi Shankar (@KasthuriShankar) October 1, 2019