Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

கவனிச்சீங்களா? மாறன் படத்துக்கு 'கோ' படத்தோட இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் நடிக்கும் மாறன் படத்திற்கும், 2011 ஆம் ஆண்டு வெளியான கோ படத்திற்கும் உள்ள கனெக்ஷன்  உள்ளது.

Dhanush Movie Spin off from K V Anand Super Hit Film Ko

மாறன் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று 2022 மார்ச் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படம்  பிரத்யேகமாக வெளியாகி உள்ளது. திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகளிலும் இது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Dhanush Movie Spin off from K V Anand Super Hit Film Ko

இன்று வெளியாகி உள்ள மாறன் படத்தில் கோ படத்தின் தொடர்பு உள்ளது. 'மாறன்' திரைப்படத்தில் தனுஷின் தந்தையாகவும் நேர்மையான பத்திரிகையாளராகவும் வரும் 90-களின் பிரபல நடிகர் ராம்கி, "தின அஞ்சல்" பத்திரிகையில் பணிபுரிகிறார். "தின அஞ்சல்" - மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய "கோ"  படத்தில் ஜூவா பணிபுரியும் பத்திரிகை. மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் "அநேகன்" படத்தில் நடித்துள்ளார்.

Dhanush Movie Spin off from K V Anand Super Hit Film Ko

இதனை Spin - Off என வரையறுப்பர். ஏற்கனவே வந்த படங்களின் காட்சிகளில் இடம் பெற்ற சம்பவம், கதாபாத்திரம், பொருள், பெயர்கள் ஆகியன அடுத்த படத்தில் பயன்படுத்துவது Spin - Off ஆகும். இது சீரிஸ்களான பாகம் 2 Prequel, Sequel-ல் சேராது. மாஸ்டர் படத்தில் நம்மவர் கமல் வருவது, மாஸ் படத்தில், எங்கேயும் எப்போதும் ஜெய் வருவது எல்லாம் Spin - off ஆகும். 

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

Dhanush Movie Spin off from K V Anand Super Hit Film Ko

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார்.இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிந்துள்ளனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Movie Spin off from K V Anand Super Hit Film Ko

People looking for online information on Anegan, தனுஷ், Dhanush, Jiiva, K V Anand, Ko, Maaran will find this news story useful.