Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

அரபிக் குத்து Reels…. செம்ம ஆட்டம் போட்ட முன்னாள் CSK வீரர் – நெல்சன் பகிர்ந்த வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Director nelson shared a video of du plesis dancing for Arabic kuthu

உங்களுக்கு எல்லாமே தெரியும்..தாமரை, சுரேஷ் நடுவுல சண்டை ஸ்டார்ட்.. "ப்ரோமோ சும்மா பத்திக்குது"

அரபிக்குத்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் கிங்ஸ்லி, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் விரைவில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் உருவான விதம் குறித்து சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் இடம்பெற்ற ஜாலியான ப்ரோமோ வெளியாகி வைரலானதுடன், பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

Director nelson shared a video of du plesis dancing for Arabic kuthu

150 மில்லியன் views

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக வெளியான அரபிக்குத்து பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. இப்போது பெரியத்திரையில் இந்த பாடல் வெளியாகியுள்ளதால் அந்த பாடலைக் காண ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வம் எழுந்துள்ளது.

Director nelson shared a video of du plesis dancing for Arabic kuthu

பிரபலங்கள் பகிர்ந்த அரபிக்குத்து நடனம்

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியில் கூட ஹிட் அடித்துள்ளது. பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை நடிகை திவ்யபாரதி, ராஷ்மிகா மந்தனா, சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பலர் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டனர். அந்த வகையில் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தென் ஆப்பிரிக்க கிர்க்கெட்டருமான பாஃப் டு பிளஸ்சி இந்த பாடலுக்கு ஆடியுள்ள வீடியோவை இயக்குனர் நெல்சன் பகிர்ந்துள்ளார். கால்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் டு பிளஸ்சி திடீரென இந்த பாடலுக்கு ஆடும் வீடியோ இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.

Director nelson shared a video of du plesis dancing for Arabic kuthu

பெரியத்திரையில் அரபிக்குத்து

இதுவரை யுடியூபில் ஹிட் அடித்து வந்த அரபிக்குத்து பாடல் இப்போது திரையரங்குகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று ரிலிஸான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இடைவேளையின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அரபிக்குத்து பாடல் திரையிடப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் பாடலுக்கு தாங்களும் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஹா இது செம! பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்திற்காக இணைந்த 3 முன்னணி தமிழ் இசையமைப்பாளர்கள்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director nelson shared a video of du plesis dancing for Arabic kuthu

People looking for online information on Arabic Kuthu song, Beast Movie, Director Nelson, Du plesis dance, Vijay will find this news story useful.