www.garudabazaar.com

"கிண்டல் பண்றாங்க.." பிளாட்ஃபார்மில் பாடி பிச்சை எடுக்கும் 'நடிகர்'.. கலங்க வைக்கும் சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல் படமாக வெளியாகியிருந்தது 'குக்கூ'. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த திரைப்படத்தில் தினேஷ் மற்றும் மாளவிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

cuckoo actor elangovan begging in subway painful situation

"சீக்கிரமா ஆரம்பிச்சுடலாம்.." விருப்பப்பட்ட 'இசைப்புயல்'.. கிரீன் சிக்னல் காட்டிய 'இசைஞானி'

பார்வையற்றவர்களாக வரும் இவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதல் குறித்து, இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த திரைப்படத்தில் தினேஷுக்கு நண்பராக இளங்கோவன் என்பவர் நடித்திருந்தார்.

இருவரும் சேர்ந்து கொண்டு, செய்யும் காமெடி காட்சிகள், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

வேதனையான நிலை

இந்நிலையில், இளங்கோவனின் தற்போதைய நிலை குறித்து, Behindwoods வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை பல்லாவரத்திலுள்ள சப்வேயில், பாட்டு பாடி இளங்கோவன் பிச்சை எடுத்து வரும் சம்பவம், பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குக்கூ படத்திற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறியதன் காரணம் என்ன என்பது பற்றி இளங்கோவன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

திட்டிக் கொண்டே இருந்தார்கள்

"எனது குடும்பத்தினர் அனைவரும் தஞ்சாவூரில் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த  2019 ஆம் ஆண்டு, அனைவரையும் பிரிந்து விட்டு, சென்னை வந்து விட்டேன். வேலை இல்லை என்பதால் என்னை தண்டச்சோறு என பெற்றோர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள். இதனால், நான் சண்டை போட்டு விட்டு வந்து விட்டேன். இப்போது எல்லாம் அம்மாவை பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர் தான் வேலை இல்லை எனக்கூறி என்னை விரட்டினார்கள்.

cuckoo actor elangovan begging in subway painful situation

வாடகை கொடுக்க முடியல

சென்னை வந்த நான் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியிருந்தேன். அப்போது, பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்தேன். ஆனால், கொரோனா தொற்று வந்த பிறகு, ரூமுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நான் இங்கு வந்து விட்டேன். சாலையோரம் தான் படுத்துக் கொள்கிறேன்" என தன்னுடைய வேதனையான சூழ்நிலையை விளக்கினார்.

கோவிட்டுக்கு முன்… கோவிட்டுக்குப் பின்… மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

துன்புறுத்தல்கள்

தொடர்ந்து தனக்கு நேரும் துன்புறுத்தல்கள் பற்றி பேசிய அவர், "இங்கே நான் பாடல் பாடும் போது, என்னை கிண்டல் செய்கிறார்கள். அடிதடி வரைக்கும் கூட சென்றுள்ளது. எனக்கு கண் தெரியாது என்பதால், இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். எனக்கான வீடு அல்லது அறை இருந்தால் இந்த தொல்லை வராது" எனக் கூறினார்.

கனவு இது தான்

மேலும், தன்னுடைய கனவு குறித்து பேசிய இளங்கோவன், "தற்போது சுரங்க பாதையில் இருக்கும் நான் அரங்க பாதைக்கு செல்ல வேண்டும். ஒரு வீட்டில் தங்க வேண்டும். அல்லது அறையிலாவது தங்க வேண்டும். மிகப் பெரிய பாடகர் ஆக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முழு வீடியோவைக் காண:

"கிண்டல் பண்றாங்க.." பிளாட்ஃபார்மில் பாடி பிச்சை எடுக்கும் 'நடிகர்'.. கலங்க வைக்கும் சோகம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

cuckoo actor elangovan begging in subway painful situation

People looking for online information on குக்கூ, தினேஷ், மாளவிகா, ராஜூமுருகன், Cuckoo actor elangovan, Cuckoo Movie, Raja Murugan, Subway painful situation will find this news story useful.