Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

"இப்படி ஒரு நடிகன் கிடைக்கிறது பேரின்பம்" - தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டிய செல்வராகவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஊட்டி: நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் உடன் இருக்கும் BTS புகைப்படம் வைரலாகி வருகிறது.

Dhanush Selvaraghavan Recent Nane Varuven Click Goes Viral

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இந்த படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Dhanush Selvaraghavan Recent Nane Varuven Click Goes Viral

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக சில்லுக்கருப்பட்டி, சாணிகாயிதம் பட ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் யாமினியும் சிலகாரணங்களால் விலகி உள்ளார். இவர்களுக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை & ஊட்டியில் நடந்து வருகிறது.  நடிகர் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறினால், அது பேரின்பம்! என கூறி தனுஷ் உடன் இருக்கும் BTS போட்டோவை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.

Dhanush Selvaraghavan Recent Nane Varuven Click Goes Viral

நானே வருவேன் படத்தின் ஊடவே தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Selvaraghavan Recent Nane Varuven Click Goes Viral

People looking for online information on Dhanush, Naane Varuven, Selvaraghavan will find this news story useful.