Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

ஆஹா இது செம! பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்திற்காக இணைந்த 3 முன்னணி தமிழ் இசையமைப்பாளர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதே ஷ்யாம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (11.03.2022) வெளியாகி உள்ளது.

Three Tamil composers have teamed up for Prabhas 'Radhe Shyam'

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (Theatrical Rights) உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார்

இந்த படத்தில் உலக புகழ்பெற்ற கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாக  பிரபாஸ் மனங்களை கொள்ளை கொள்கிறார். பூஜா ஹெக்டே பிரபாஸின் காதலியாக வலம் வருகிறார். சத்யராஜ், ஜெயராம் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர்களும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றி உள்ளனர். 

Three Tamil composers have teamed up for Prabhas 'Radhe Shyam'

குறிப்பாக இசையமைப்பில் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரும், பின்னணி இசைக்கு தமனும் பணியாற்றி உள்ளனர். இவர்கள் போக ஒரு பாடலான ஆகூழிலே பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். மூன்று முன்னணி இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.

Three Tamil composers have teamed up for Prabhas 'Radhe Shyam'

காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? எனும் கேள்விக்கு பதிலே ராதே ஷ்யாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Three Tamil composers have teamed up for Prabhas 'Radhe Shyam'

People looking for online information on Justin Prabhakar, Pooja Hegde, Prabhas, Radhe Shyam, Thaman SS, Yuvan Shankar Raja will find this news story useful.