Reliable Software
www.garudabazaar.com

"மாற்றம் தான் மாறாதது!!" - பிக்பாஸ் நடிகைக்கு குவியும் பாராட்டு! அப்படி என்ன செஞ்சாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜனனி ஐயர். மாடலிங் துறையில் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த ஜனனி ஐயர் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

Janani Iyer removed her community name fans praising

2010-ஆம் ஆண்டு நந்தினி ஜே.எஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் ஜனனி ஐயர். அஜ்மல் அமீர், ரூபா மஞ்சரி மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தில் ஒரு விளம்பர மாடலாக கைக்குழந்தையோடு கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து விஷால், ஆர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் முதன் முதலில் பிரபலமானார். இதேபோல் அசோக்செல்வனுடன் இணைந்து நடித்த தெகிடி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரைத் தேடித் தந்தது. பின்னர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி ஐயர் தமிழ் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமாக ரீச் ஆனார்.

இந்த நிலையில் நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்கிற தம்முடைய சமூக பெயரை நீக்கி இருக்கிறார். பொதுவாகவே பலரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் இரண்டாவது பெயராக சமூக பெயர்களை வைத்துக் கொள்வதுண்டு. இந்த சூழலில் ஜனனி ஐயர் தமது சமூக பெயரை நீக்கி தம்முடைய இன்ஸ்டாகிராமில் ஜனனி என தமது பெயரை மாற்றியிருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் Janani Iyer என்பதற்கு பதிலாக Janani is here என மாற்றம் செய்துள்ளார்.

இதனை அடுத்து அவரை அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும், இந்த மாற்றத்திற்கு பாராட்டி வருகின்றனர். இந்த மாற்றம் குறித்து தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜனனி, “மாற்றம் ஒன்றே மாறாதது.. என்றும் ஒற்றுமையுடன்” என்று குறிப்பிட்டு பதிவிட்டு பகிர்ந்திருக்கிறார்.

Janani Iyer removed her community name fans praising

People looking for online information on Janani Iyer will find this news story useful.