Reliable Software
www.garudabazaar.com

தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரெய்லர்.. கார்த்திக் சுப்புராஜ் மாஸ் ட்வீட்! படு குஷியில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

Dhanush Karthik Subbaraj fans excited Jagame Thandhiram Trailer

சந்தோஷ் நாராயணன் இசையில் Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்து உருவாகியுள்ள ஜகமே தந்திரம் netflix ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுருளி எனும் கேங்ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நினைக்கும் லட்சியத்தில் நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை சொல்லும் இப்படம் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையும் வகையில் 16க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த படம் 18+வயதுக்காரர்களுக்கான திரைப்படம் என்றும் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் படு கொண்டாட்டத்திலும் கடும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் நடிப்பில் சீயான்60 படத்தை இயக்கி வருகிறார். 

ALSO READ: “நிஜ வாழ்க்கையில சூர்யா நிறைய கோபப்படுவார்.. ஆனா அந்த கோபத்தை..” .. ரிவீல் செய்த சூரரைப் போற்று இயக்குநர்!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Karthik Subbaraj fans excited Jagame Thandhiram Trailer

People looking for online information on Jagame Thanthiram, Karthik Subbaraj, Karthik Subburaj will find this news story useful.