நடிகர் ஜெயராமின் பொண்ணு நடிப்பில் முதல் வீடியோ - அதுவும் அப்பாவுடன் - செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெயராம். தமிழில் 'முறைமாமன்', 'பெரிய இடத்து மாப்பிள்ளை', 'பஞ்ச தந்திரம்', 'ஏகன்', 'துப்பாக்கி' ஆகிய படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார்.

ஜெயராம் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் 'மீன் குழம்பும் மண்பானையும்', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ஜெயராமின் மகள் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தை ஜெயராமுடன் இருக்கும் விளம்பரப் பட வீடியோவை பகிர்ந்துள்ளார். மாளவிகா முதன் முதலாக நடித்திருக்கும் வீடியோ என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Entertainment sub editor