'அம்மாவின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.!' - வீடியோவுடன் செம நெகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் பிரபல நடிகர் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அம்மாவின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம் | biggboss fame actor mugen rao celebrates his mother birthday

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர், தனி இசை ஆல்பங்கள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் போட்டியில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல், பெரிதும் பிரபலமானது. 

இந்நிலையில் முகேன் ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது அம்மாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்துள்ள அவர், அவரை வாழ்த்தி பதிவிட்டிருப்பதோடு, ''எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா'' என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவரது பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

அம்மாவின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம் | biggboss fame actor mugen rao celebrates his mother birthday

People looking for online information on BIGGBOSS TAMIL, Mugen Rao will find this news story useful.