Bigg Boss Tamil 3: மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அவர் இல்ல இவர்..?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 27, 2019 08:54 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு, அவரையடுத்து, வனிதா, அதன் பின்னர் மோகன் வைத்தியா ஆகியோர் வெளியேறினர்.
இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 எலிமினேஷனுக்கு சேரன், அபிராமி, மீரா, சரவணன், சாக்ஷி, கவின் ஆகிய 5 பேர் நாமினேட் ஆகியிருக்கும் சூழலில், மக்கள் மத்தியில் சாக்ஷி குறைவான வாக்குகளை பெற்ரிருப்பதாகவும், அவரே இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக வேறு ஒரு போட்டியாளர் வெளியேறக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் லக்ஸுரி டாஸ்க்கிற்காக நடத்தப்பட்ட கிராமிய டாஸ்க்கில் தினசரி ஒரு பிரச்சனைகள் வெடித்தது. இந்நிலையில், நாட்டாமையாக இருந்த சேரன் மீது மீரா வைத்த பகீர் குற்றச்சாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இயக்குநர் சேரன். அவர் மீது மீரா வைத்த குற்றச்சாட்டு மக்களை கடுப்பேற்றியதால், சாக்ஷிக்கு பதிலாக மீரா மீது வெறுப்பை காட்டும் விதமாக அவருக்கு குறைவான வாக்குகளை மக்கள் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், இந்த வாரம் சாக்ஷிக்கு பதிலாக மீரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்றைய எபிசோடில், கமல்ஹாசன் இந்த விவகாரத்தை பிரித்து மேயவிருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.
BIGG BOSS TAMIL 3: மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது அவர் இல்ல இவர்..? வீடியோ