Bigg Boss Tamil 3: இந்த வாரம் காப்பாற்றப்படுவது இவர் தான்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 28, 2019 12:01 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் பிக் பாஸ் வீட்டில் நடந்த கிராமிய டாஸ்க், கலவரம், குற்றச்சாட்டுகள் குறித்து கமல்ஹாசன் தனது ஸ்டைலில் விவாதித்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதொ 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில், ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோரை தொடர்ந்து மோகன் வைத்தியா பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் அபிராமி, சேரன், சரவணன், மீரா, சாக்ஷி மற்றும் கவின் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் காப்பாற்றப்படும் நபர் யார் என்பதை கமல்ஹாசன் தெரிவித்தார். அதன்படி, சேரன் காப்பாற்றப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வாரம் நடந்த கிராமிய டாஸ்க்கின் போது, களவாடிய லொஸ்லியாவை பிடிக்கச் சென்ற சேரன், அங்கிருந்த மீராவை தள்ளிவிட்டது தொடர்பாக மீரா குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியிருந்தார். சேரன் தகாத முறையில் தன்னிடம் நடந்துக் கொண்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். சேரன் மீதான மீராவின் குற்றச்சாட்டை கண்டிக்கும் விதமாக சேரனுக்கு அதிகளவிலான வாக்குகளை கொடுத்து அவரை இந்த வாரம் மக்கள் காப்பாற்றியுள்ளனர்.