www.garudabazaar.com

"எனக்காக wait பண்ணாதீங்க".. விபத்தில் காயம் பட்ட பிரகாஷ் ராஜ்-க்கு பதில் AV33-ல் நடிக்கும் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் - ஹரி கூட்டணியில்  “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.

AV33 prakash raj replaced அருண் விஜய் படம் பிரகாஷ் ராஜ் மாற்றம்

தமிழில் மக்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் அருண் விஜயுடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.

இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது  #AV33 படத்திற்கும் அருண் விஜயின் அண்ணனாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநியில் நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர்கள், நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ், ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் #AV33 ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருவதால் பிரகாஷ் ராஜ், டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் தன்னால் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.

தனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் தனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை  நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதோடு, தான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுவதாகவும் கூறிய பிரகாஷ் ராஜ், அடுத்த படத்தில் இணைவோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் நடிகர் சமுத்திரகனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக இந்த படத்தில் சமுத்திரகனி நடித்து வருகிறார். அருண் விஜய், ப்ரியா பவானிசங்கர், சமுத்திரகனி மற்றும் பெரும் நடசத்திரங்கள் பங்கேற்க “AV33” படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. பழனியைத் தொடர்ந்து படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடரும்.

இப்படத்தில்  யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த, குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு GV பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைப் பயிற்சியை அளிக்கிறார். Drumsticks Productions எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். G.அருண் குமார் இணைந்து தயாரிக்கிறார்.

PRO: Johnson

AV33 prakash raj replaced அருண் விஜய் படம் பிரகாஷ் ராஜ் மாற்றம்

People looking for online information on Aishwarya, And Ammu Abhirami, Arun Vijay, Aunvijay, AV33, Bose Venkat, Garuda Ram, Imman Annachi, Jayabalan, Prakash Raj, Priya Bhavanishankar, Pugazh, Radikaa, Ram, Samuthirakani, Thalaivaasal Vijay, Yogi Babu will find this news story useful.