www.garudabazaar.com

'கர்ணன்' புகழ் லக்‌ஷ்மி ப்ரியா நடிக்கும் 'யாமா'.. சைக்கோ வில்லனாக மிரட்டும் பிரபல இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சையது முகமது இயக்கியுள்ள திரைப்படம் யாமா. 

viju lakshmi priya yaamaa A venkatesh villain யாமா

இப்படத்தில் நாயகனாக விஜு நடித்துள்ளார். நாயகியாக லக்‌ஷ்மி குறும்படம் மூலம் பிரபலமாகி பின்னர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி நடித்துள்ளார்.

எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் மற்றும் பெண் கவிஞர் மதுரா பாடல்களை எழுதியுள்ளனர்.  ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் செந்தில் குமார் ராஜேந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கிற யாமா படத்தின் ரீ ரெக்கார்டிங் பகுதியின் நிறைவுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திரில்லர் படமாக வரவிருக்கும் யாமா திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சைக்கோ வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார்.

இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்து விட்டு படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று  இயக்குநரும் நடிகருமான வெங்கடேஷ் குறிப்ப்பிட்டு, இப்படத்தின் இயக்குனர் சையதுவை பாராட்டியிருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் சையது என்பவர், ஏ.வெங்கடேஷின் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘ஒரே மாசத்துல ரெண்டு!’.. விஜய் சேதுபதியின் மற்றுமொரு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

viju lakshmi priya yaamaa A venkatesh villain யாமா

People looking for online information on Karnan, Lakshmi Priya, Lakshmi Priyaa Chandramouli, LV Muthu - Ganesh, Yaamaa, YaamaaFirstLook, YaamaaFirstLookPoster, YaamaaMovie will find this news story useful.