www.garudabazaar.com

"ஆக்சன் & திரைக்கதை".. துணிவு FDFS பார்த்த நடிகர் அருண் விஜய் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் இன்று (11.01.2023) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Arun Vijay tweet about Ajith Kumar Thunivu Movie

Also Read | ஷிவினை பற்றிய ஹேஷ்டாக்ஸ்.. சொல்லியதும் வெட்கப்பட்ட விக்ரமன்.. !

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Arun Vijay tweet about Ajith Kumar Thunivu Movie

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Arun Vijay tweet about Ajith Kumar Thunivu Movie

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Arun Vijay tweet about Ajith Kumar Thunivu Movie

இந்நிலையில் நடிகர் அருண் விஜய், தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்து விட்டு, "அஜித் குமார் சாரின் தெறிக்கும் SWAG!!💥💥 ரசிகர்களுக்கு பெரிய விருந்து... ஆக்சன்.. திரைக்கதை.. நடிப்பு.. அருமையான கருத்து...👌🏾👌🏾 #துணிவு 💥💥💥

#HVinoth மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்...👍🏽" என அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | RRR Naatu Naatu பாடல் .. உயரிய கோல்டன் குளோப் விருதை வென்ற இசையமைப்பாளர்.. தட்டி தூக்கியாச்சுல!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay tweet about Ajith Kumar Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Arun Vijay, Arun Vijay tweet, Arun Vijay tweet about Thunivu Movie, Thunivu will find this news story useful.