www.garudabazaar.com

பாடல் காட்சிகளுடன் வெளியான துணிவு படத்தின் புதிய வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

Ajith Kumar Thunivu New Promo Video released by Film Crew

Also Read | "இனிமே அதை இப்படி டீல் பண்ணுங்க".. ஷிவின் வாழ்க்கைல நடந்த சம்பவம்.. கதிர் கொடுத்த அட்வைஸ்..!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரித்திருக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

Ajith Kumar Thunivu New Promo Video released by Film Crew

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார்.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்திருக்கிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணியாற்றி உள்ளார்.

Ajith Kumar Thunivu New Promo Video released by Film Crew

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Ajith Kumar Thunivu New Promo Video released by Film Crew

இந்நிலையில், படத்தின் பாடல் காட்சிகள் அடங்கிய புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. துணிவு படம் நாளை உலகமெங்கிலும் ரிலீசாக இருப்பதை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Also Read | ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வாரிசு, துணிவு.. ட்விட்டரில் வெங்கட் பிரபு வைத்த புதிய DP .. Trending!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu New Promo Video released by Film Crew

People looking for online information on Ajith Kumar, Film Crew, Thunivu, Thunivu New Promo Video will find this news story useful.