www.garudabazaar.com

"நீங்கள் இரண்டு பேரும் லவ் பண்றது அஜித் சாருக்கு தெரியுமா?'.. அமீர் & பாவனி பதில்! #EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Amir Pavni Exclusive Interview about Thunivu Ajith Kumar

வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Amir Pavni Exclusive Interview about Thunivu Ajith Kumar

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Amir Pavni Exclusive Interview about Thunivu Ajith Kumar

இந்த படத்தில் நடித்துள்ள அமீர் & பாவனி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அப்போது, நீங்கள் இருவரும் காதலிப்பது அஜித் சாருக்கு தெரியுமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாவனி & அமீர், "இரண்டாவது நாள்ல தான் இது அஜித் சாருக்கு தெரிய வந்தது. யார்ட்ல படப்பிடிப்பு நடக்கும் போது தெரியவந்தது. சாரே யாருட்ட எங்களை அறிமுகம் செய்து வைத்தாலும் "They both are seeing each other" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்". என பாவனி & அமீர் மகிழ்ச்சியோடு கூறினர்.

"நீங்கள் இரண்டு பேரும் லவ் பண்றது அஜித் சாருக்கு தெரியுமா?'.. அமீர் & பாவனி பதில்! #EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Amir Pavni Exclusive Interview about Thunivu Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Amir, Pavni, Thunivu will find this news story useful.