www.garudabazaar.com

"வாரிசு FDFS விஜய் எங்க போறாரு?".. ரகசியமா ராஷ்மிகா சொன்ன பதில்?!.. Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Rashmika about vijay varisu FDFS secret exclusive

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

Rashmika about vijay varisu FDFS secret exclusive

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், வாரிசு படத்தின் நடிகை ராஷ்மிகா மந்தனா Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போல வாரிசு படத்தின் FDFS பார்க்க ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் போக உள்ளதாகவும் அந்த சீக்ரெட் ராஷ்மிகாவுக்கு தெரியும் என்பது பற்றிய கேள்வியையும் நெறியாளர் முன்வைக்க, "எனக்கு தெரியாது, அதுவும் டாப் சீக்ரெட் தான்" என ராஷ்மிகா தெரிந்தும் தெரியாதது போல பதில் கூறினார். இதனால், விஜய் ஒரு திரை அரங்கில் நிச்சயம் FDFS பார்க்க செல்வார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Rashmika about vijay varisu FDFS secret exclusive

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெவ்வேறு கெட்டப்புகள் போட்டு தனது திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க செல்வது பற்றியும் அது குறித்து விஜய்யிடம் கேட்டுள்ளீர்களா என்றும் ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பப்பட, இதற்கு பதில் சொல்லும் அவர், "கேட்டேன். கண்டிப்பா விஜய் சார் அப்படி பண்ணி இருப்பாரு. எல்லா நடிகர்களுக்கும் இந்த மாதிரி பண்றது பிடிக்கும். நானும் ஃபர்ஸ்ட் ஷோ போவேன். ஆனா யார்கிட்டயும் எந்த தியேட்டர் போறேன்னு சொல்ல மாட்டேன். மாஸ்க், தொப்பி எல்லாம் போட்டுட்டு என் படத்துக்கு நானே சத்தம் போட்டுட்டு இருப்பேன்" என கூறினார்.

"வாரிசு FDFS விஜய் எங்க போறாரு?".. ரகசியமா ராஷ்மிகா சொன்ன பதில்?!.. EXCLUSIVE!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika about vijay varisu FDFS secret exclusive

People looking for online information on Rashmika Mandanna, Vamsi Paidipally, Varisu, Varisu FDFS, Vijay will find this news story useful.