www.garudabazaar.com

வாரிசு படம் பார்த்து விட்டு.. தளபதி 67 Update கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. Varisu!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் தற்போது திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Lokesh Kanagaraj about Thalapathy 67 after varisu movie show

Also Read | "வாரிசு FDFS விஜய் எங்க போறாரு?".. ரகசியமா ராஷ்மிகா சொன்ன பதில்?!.. Exclusive!!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

Lokesh Kanagaraj about Thalapathy 67 after varisu movie show

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வாரிசு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வாரிசு படம் பார்க்க திரை அரங்கிற்கு வந்திருந்த நிலையில், தளபதி 67 படத்தை குறித்தும் பேசியுள்ள விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj about Thalapathy 67 after varisu movie show

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளவர் லோகேஷ் கனகராஜ். அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் இணைந்திருந்தார் லோகேஷ். வாரிசு படத்தை தொடர்ந்து, விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாரிசு படம் பார்த்து விட்டு வந்த லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்ததாகவும், இதற்கு பிறகு அப்டேட்கள் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கே இருந்த ஒருவர், "நம்ம செய்றோம்ணா, நம்ம செய்றோம்" என தளபதி 67 படத்தை குறிப்பிட்டு கூறினார். இதனைத் தொடர்ந்து, விஜய்யை எவ்வளவு புதிதாக தளபதி 67 படத்தில் காட்ட போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், "பாருங்க" என்றும் பதில் தெரிவித்திருந்தார்.

Also Read | "வாரிசு படத்தோட Goosebump தருணம்".. திரை தீப்பிடிக்கும் 🔥 .. எதிர்பார்ப்பை எகிற வைத்த ராஷ்மிகா

வாரிசு படம் பார்த்து விட்டு.. தளபதி 67 UPDATE கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. VARISU!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about Thalapathy 67 after varisu movie show

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67, Varisu, Vijay will find this news story useful.