பிரபல இசையமைப்பாளர் இளம் வயதில் மரணம் - அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தபங்', 'வான்டட்' உள்ளிட்டபடங்களின் மூலம் பாலிவுட்டில் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான சஜித்-வஜித் (Sajid-Wajid) ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இருவரது இசையில் கடைசியாக சல்மான் கான் நடிப்பில் 'தபங் 3' திரைப்படம் வெளியாகியிருந்தது.

Anirudh to pay tribute to popular music director Wajid Khan | பிரபல இசையமைப்பாளர் மறைவிற்கு அனிருத் இரங்கல்

இந்நிலையில் இந்த இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான வஜித் கான் (Wajid Khan) இன்று ( 01/06/2020) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 42 என்று கூறப்படுகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்கள் வஜித் பாய். இனிமையான மனிதர். உங்களின் இசை எங்களுடன் எப்பொழுதம் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Anirudh to pay tribute to popular music director Wajid Khan | பிரபல இசையமைப்பாளர் மறைவிற்கு அனிருத் இரங்கல்

People looking for online information on Anirudh Ravichander, Coronavirus, Covid 19, Sajid-Wajid, Wajid Khan will find this news story useful.