www.garudabazaar.com

துபாயில் குடும்பத்துடன் நடிகர் அஜித்குமார்.. ஷாலினி பகிர்ந்த வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Ajithkumar Shalini Ajithkumar Dubai Vacation with family

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஆஸ்கார் விருது விழாவில் வைரலாகும் தீபிகா படுகோனே-யின் புதிய டாட்டூ.. அதுக்கு இது தான் அர்த்தமா! வைரல் போட்டோஸ்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Ajithkumar Shalini Ajithkumar Dubai Vacation with family

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Ajithkumar Shalini Ajithkumar Dubai Vacation with family

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

அடுத்ததாக நடிகர் அஜித், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார், தமது குடும்பத்துடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Ajithkumar Shalini Ajithkumar Dubai Vacation with family

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கால்பந்து மைதானத்தில் ஆத்விக் உடன் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படமும், அனோஷ்கா & ஆத்விக் உடன் அஜித் & ஷாலினி இருக்கும் புகைப்படமும், அஜித் & ஷாலினி மட்டும் தனியாக இருக்கும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | இந்தியாவுக்கே பெருமை! OSCAR வென்ற RRR பாடல்.. விருது அறிவிக்கும் போது தீபிகா படுகோனேயின் வைரல் ரியாக்ஷன்.. VIDEO

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Shalini Ajithkumar Dubai Vacation with family

People looking for online information on Ajith Kumar, Shalini, Shalini ajithkumar, Shalini Ajithkumar Dubai Vacation will find this news story useful.