Naatu Naatu : ஆஸ்கார் விருது பெற்ற பின்.. MM கீரவாணி பாடிய பாடல்.. வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்ஆஸ்கர் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணி பாடலில் தனது எண்ணங்களை வெளிப்படுத்த அரங்கமே கைதட்டுகளாலும் ஆராவாரத்தாலும் ஆர்ப்பரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்கர் 2023
சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
RRR
RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
கீரவாணி
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.
பாடல்
இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்த அனைவருமே உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இதனிடையே ஆஸ்கரை வென்ற பிறகு பேசிய கீரவாணி,"அகாடமிக்கு நன்றி. நான் கார்பெண்டர்ஸ்-ன் (அமெரிக்க இசைக்குழு) பாடல்களை கேட்டு வளர்ந்தவன். தற்போது ஆஸ்கரை வென்றுள்ளேன்" என்றார். தொடர்ந்து,"என்னுடைய மனதில் ஒரே ஆசைதான் இருந்தது. ராஜமவுலிக்கும் எனது குடும்பத்தினருக்கும் அந்த ஆசையே இருந்தது. RRR படம் ஆஸ்கரை வெல்ல வேண்டும். இது இந்தியர்களின் பெருமை. இந்த வெற்றி என்னை உலகின் உச்சியில் நிறுத்திவிட்டது" என பாடலாக பாடினார். கார்பெண்டர்ஸ்-ன் ஆன் டாப் ஆஃப் தி வேர்ல்டு பாடலை போலவே கீரவாணி பாடிய இந்த பாடல் அரங்கத்தினரை உற்சாகப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
#NaatuNaatu wins the #Oscar for best Original Song 😭#SSRajamouli & team has done it🫡🇮🇳
Indian Cinema on the Rise 🔥 !! #RRRMovie | #AcademyAwards | pic.twitter.com/VG7zXFhnJe
— Abhi (@abhi_is_online) March 13, 2023
Also Read | தமிழ்நாட்டின் முதுமலையில் தயாராகி ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படம்! விபரம்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Oscars 2023 Update RRR Movie Naatu Naatu Wins Best Song
- SS Rajamouli With Ram Charan Jr NTR RRR Koelae Song
- Dance Master Prem Rakshith Exclusive About Naatu Naatu Song
- RRR Movie Rajamouli Naatu Naatu Song Nominated In Oscars 2023
- I Just Met GOD SS Rajamouli MM Keeravani Spielberg Naatu Naatu
- Shah Rukh Khan Tweets About Naatu Naatu Song Win Golden Globe Awards
- RRR Naatu Naatu Song Won Golden Globe Award
- Jr NTR Lakshmi Ramcharan Upasana In America For RRR Golden Globe
- RRR Naatu Naatu Song Shortlisted For The Academy Awards
- RRR Movie Nominated For Golden Globe Awards
- RRR Movie Beat Bahubali 2 Collection In Japan
- SS Rajamouli Develops RRR Part 2 With His Father Vijayendra Prasad
தொடர்புடைய இணைப்புகள்
- RRR உட்பட India-லருந்து 3 படங்கள்... OSCAR-ல் மிரட்டும் Indian CInema... PROUD MOMENT🔥
- തരളിത രാവും ശിശിരകാല മേഘവും...മലയാളി നെഞ്ചോട് ചേർത്ത കീരവാണിയുടെ ഈണങ്ങൾ
- நாட்டு குத்து பாடலுக்காக Golden Globe Award வாங்கிய Keeravani. சந்தோஷத்தில் எழுந்து நின்ற Rajamouli
- "ഇത് എന്റെ ഓർമ്മ ദിവസമാണ്, വീൽ ചെയറിലായ ദിവസം"|Renjith Tattoo Artist
- "എന്റെ കാര്യത്തിൽ പ്രതീക്ഷയൊന്നുമില്ല, എണീറ്റ് നടക്കുമെന്ന് ഡോക്ടർമാർ പറഞ്ഞിട്ടില്ല"|Renjith
- "നിഴലായിരുന്ന അച്ഛന്റെ വിയോഗം താങ്ങാവുന്നതിലും അപ്പുറമാണ് "|Renjith
- "ഈ ജന്മത്തിൽ ആർക്കും ഒരു ദ്രോഹവും ചെയ്തിട്ടില്ല, മുൻജന്മപാപം എന്നൊക്കെ പറയുന്നത്
- "പരീക്ഷണത്തിലൂടെയാണ് നാല് കൊല്ലമായി പോകുന്നത്, പക്ഷേ പിടിച്ചു നിന്നേ പറ്റൂ "|Renjith|Tattoo Artist
- പ്രായപൂർത്തിയാകാത്ത മകൾ അച്ഛന് കരൾ പകുത്തുനൽകാൻ തീരുമാനിച്ചത്, ഹൈക്കോടതി അനുവദിച്ചതെങ്ങനെ?
- Accident മൂലം കിടപ്പിലായിട്ടും You Tube നോക്കി പഠിച്ച് Tattoo Artist ആയ Renjith
- 'നാട്ടു നാട്ടു' ഗാനവും യുക്രൈന് പ്രസിഡന്റ് സെലന്സ്കിയും തമ്മിലെ ബന്ധമെന്ത് ?
- அப்பாவான RAM CHARAN 😍 இன்னொரு Action Hero Ready 🔥 Chiranjeevi Emotional...