www.garudabazaar.com
iTechUS

துணிவு கிளைமாக்ஸ் படகு சேசிங் & Bank சண்டை காட்சி‌ .. Goosebumps மேக்கிங் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதியன்று துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது.

Ajith Kumar Thunivu making video boat chasing bank fight

Image Credit : Zee Studios South Twitter

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, நடிகர் அஜித், இயக்குனர் H. வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம் ஆகவும் துணிவு உருவாகி இருந்தது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்திருந்தது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, தர்ஷன், ஜிஎம் சுந்தர், மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி, சிபி சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும், சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Ajith Kumar Thunivu making video boat chasing bank fight

Image Credit : Zee Studios South Twitter

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த துணிவு திரைப்படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியாகி இருந்த வீடியோவில், துப்பாக்கி சுடும் காட்சிகள்,  Mocobot கேமரா பயன்படுத்தி எடுத்த காட்சிகள், ரியலாக வெடிக்க வைக்கப்பட்ட வெடி குண்டுகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

Ajith Kumar Thunivu making video boat chasing bank fight

Images are subject to © copyright to their respective owners

இதனையடுத்து, தற்போது வெளியாகி உள்ள உருவாக்க வீடியோவில், கிளைமாக்சில் வரும் படகு சேசிங் காட்சிகளும், சில வெடிகுண்டுகள் வெடிக்கும் காட்சிகளும், வங்கிக்குள் நடக்கும் பைட் காட்சிகளின் மேக்கிங் தொடர்பான வீடியோக்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவின் மூலம் நடிகர் அஜித், H. வினோத் உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரும் மிகவும் ரிஸ்க் எடுத்து காட்சிகளை வடிவமைத்துள்ளதும் தெரிய வருகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu making video boat chasing bank fight

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Manju Warrier, Nirav shah, Thunivu BTS will find this news story useful.