Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

AK61 கெட்-அப்பில் சென்னைக்கு அருகில் உள்ள போலீஸ் அகாடமியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பியுள்ளார்.

Ajith Kumar at Morai Veerapuram Police Training Academy

Also Read | "6 வருசத்துக்கு அப்பறம் இந்த கெட்-அப்".. செம்ம ஸ்மார்ட் லுக்கில் கார்த்தி வெளியிட்ட போட்டோ!

தற்போது நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. AK 61 படத்தின் அதே லுக்கில் தாடியுடன் காதில் கடுக்கனுடன் அஜித் காட்சியளிக்கிறார்.

மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ராணுவ ரிசர்வ் கேம்பஸில் இன்று  (26.07.2022) துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar at Morai Veerapuram Police Training Academy

AK 61

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Ajith Kumar at Morai Veerapuram Police Training Academy

அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

Ajith Kumar at Morai Veerapuram Police Training Academy

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

Also Read | VIDEO: துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA படம்.. கார்த்தி வெளியிட்ட கலர்ஃபுல் தமிழ் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar at Morai Veerapuram Police Training Academy

People looking for online information on Ajith Kumar, AK 61, Morai Veerapuram Police Training Academy will find this news story useful.