IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சென்னையில் அஜித் நடிக்கும் 'AK 61' படத்தின் படப்பிடிப்பு.. ரசிகர்களுடன் H. வினோத் & TEAM! வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு  போட்டோக்கள் ரசிகர்கள் மூலம் வெளியாகி உள்ளன.

Ajith Kumar AK 61 Movie Chennai Shooting Spot Image

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. லைகா வெளியிட்ட விக்ரமின் தெறி மாஸ் வீடியோ!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

Ajith Kumar AK 61 Movie Chennai Shooting Spot Image

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த சென்னை படப்பிடிப்பில் இயக்குனர் எச். வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா & கலை இயக்குநர் மிலன் ஆகியோர் ரசிகர்கள் உடன் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. 

Ajith Kumar AK 61 Movie Chennai Shooting Spot Image

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடிகர் அஜித் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் குடும்பத்தினருடன் உள்ளார்.

Ajith Kumar AK 61 Movie Chennai Shooting Spot Image

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Also Read | அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'குருதி ஆட்டம்'.. ரிலீஸ் எப்போ? மாஸ் போஸ்டரோடு வந்த UPDATE!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie Chennai Shooting Spot Image

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, AK 61 Movie Chennai Shooting spot will find this news story useful.